Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 21 ஜூன் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய கனரக வாகன ஓட்டுனர்கள் நல கூட்டமைப்பு சார்பில் இலவச பொது மற்றும் கண் பரிசோதனை முகாம் திருப்பூர் மாவட்ட செயலாளர் செல்வகனி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் இந்திய கனரக வாகன ஓட்டுனர்கள் நல கூட்டமைப்பு மாநில செயலாளர் அசோக் குமார் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது,
தமிழகத்தில் தற்சமயம் ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே நலவாரியம் அமைத்து சாலை பாதுகாப்பு குழுவில் ஓட்டுநர்களை இணைக்க வேண்டும்.
மேலும் வாகன ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச இன்சூரன்ஸ் விபத்து காப்பீடு வழங்க வேண்டும், 60 வயதுக்கு மேற்பட்ட வாகன ஓட்டுனர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டும்.
மேலும் குறிப்பாக வட மாநிலங்களுக்குச் செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு பாதிப்பில்லாத நிலை உள்ள காரணத்தால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணைக்கட்டுவதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பதற்கு இந்திய கனரக வாகன ஓட்டுனர்கள் நல கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசுக்கு நன்றி என பேசினர்.
Hindusthan Samachar / ANANDHAN