ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ செல்லியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா
திருவண்ணாமலை, 21 ஜூன் (ஹி.ச.) திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், கருமாரப்பட்டி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ செல்லியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக மங்கள இசை, கு
Festival


திருவண்ணாமலை, 21 ஜூன் (ஹி.ச.)

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், கருமாரப்பட்டி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ செல்லியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக மங்கள இசை, குரு வந்தனம், கிராம வேதா பிரார்த்தனை, கணபதி ஹோமம், கோபூஜை, லட்சுமி ஹோமம், முதல் யாகசாலை பூஜை, மஹா பூர்ணாஹீதி, சாந்தி ஓமம், தம்பதி பூஜை, இரண்டாம் யாககால பூஜை,108 கலச அபிஷேகம் உள்ளிட்டவைகள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்று அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ செல்லியம்மன் ஆலய கோபுர உச்சியில் கலச புனித நீர் ஊற்றப்பட்டு மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்று புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

பின்பு தீபாரதனை நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோயில் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Hindusthan Samachar / ANANDHAN