Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஜூன் (ஹி.ச.)
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், வடசென்னை ரோட்டரி கிளப் அமைப்புடன் இணைந்து இன்று காலை செனாய் நகர் மெட்ரோ நிலையம் அருகே உள்ள திரு.வி.க. பூங்கா திறந்தவெளி அரங்கில் சிறப்பு இலவச யோகா நிகழ்ச்சியை நடத்தியது.
காலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் எளிதாக பங்கேற்கும் வகையில் யோகா பயிற்சிகள் இரண்டு தனித்தனி அமர்வுகளாக நடத்தப்பட்டன.
தினசரி உடல்நலத்தை மேம்படுத்துதல், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்தல் மற்றும் மனஅழுத்தத்தைக் குறைத்தல் உள்ளிட்ட நோக்கங்களுடன் எளிய யோகாசனங்கள் கற்பிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பலர் தங்களது குடும்பத்தினருடன் ஆர்வமுடன் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர். இந்த முயற்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய வடசென்னை ரோட்டரி கிளப் அமைப்பிற்கும், ஆர்வத்துடன் பங்கேற்ற அனைத்து பொதுமக்களுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் நன்றியைத் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P