Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 21 ஜூன் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவகுமார்
( வயது 24).
இவர் கோவை கல்லூரி அருகே மணி தியேட்டர் அருகில் குடியிருந்து கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
வாடிக்கையாளர்களை காரில் ஜி .என். மில்ஸ் பகுதியில் இருந்து ஏற்றுக் கொண்டு கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு சென்றார்.
அப்போது கிராஸ்கட் ரோட்டில் வடகோவை காலம் அருகில் சென்ற போது 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
அப்போது அவர்களை வலி விடும்படி சசிக்குமார் ஒளி எழுப்பியதாக கூறப்படுகிறது.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதனால் அந்த 3 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் காருக்கு முன்னால் வழி விடாதபடி சென்றனர்.
இதனால் சசிக்குமார் தொடர்ந்து ஒளி எழுப்பினார். அப்போது திடீரென்று அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி காருக்கு வந்து சசிக்குமாரை தாக்கினர். காரை விட்டு இறங்கும்படி கூறி உள்ளனர்.
இந்த காட்சியை சசிக்குமார் முதலிலேயே அவர்கள் வழிவிடாமல் செல்வதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து உள்ளார்.
அதன் பிறகு அந்த கும்பல் அவரை தாக்கியதால் அது பதிவாகவில்லை. இந்த காட்சி கோவையில் வைரலாக பரவியது.
அதன் பிறகு காயம் அடைந்த சசிகுமார் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து அவர் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் 3 வாலிபர்களை தேடி வருகிறார்கள். வாலிபர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் பதிவு எண் வீடியோவில் பதிவாகி உள்ளது.
அதன் மூலம் அந்த வாலிபர்கள் யார் ? என போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள்.
Hindusthan Samachar / Durai.J