Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 22 ஜூன் (ஹி.ச.)
கோவையிலிருந்து நெல்லை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் பயணித்த பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற 58 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் வழியாகச் சென்றுகொண்டிருந்த பேருந்தில் இரவு நேரப் பயணத்தின்போது,
சக பயணியான அந்த முதியவர் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதனை எதிர்த்த மாணவியை அவர் பின்தொடர்ந்து மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது.பாதிக்கப்பட்ட மாணவி உடனடியாக நெல்லை பேருந்து நிலையத்தில் இறங்கி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மாணவியின் புகாரை ஏற்று வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு கன்னியாகுமரியைச் சேர்ந்த சுரேஷ் (58) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பொது போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து இந்த சம்பவம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இரவு நேர பேருந்துகளில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b