Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர் , 22 ஜூன் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் குளிர்பதன அமைப்பில் இருந்து நேற்று திடீரென அம்மோனியா வாயு கசிந்தது.
இதனால் அங்கு பணியில் இருந்த வடமாநில தொழிலாளர்கள் பலர் மயக்கமடைந்தனர்.
சம்பவ இடத்திலேயே சிலர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிறுவனத்தை சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜோசப் ஜெகன்
(வயது 48), மோகன் (59) ஆகியோர் நடத்தி வருகிறார்கள்.
சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும், தொழிற்சாலை பாதுகாப்புத் துறையினரும் ஆலையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பு விதிமீறல்கள் இருந்ததா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
உயிரிழந்த பெண்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் மஞ்சங்காரணை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜூமானி ஜூவான் (19), மலோத்தி (20) ஆகிய 2 பெண் தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி பலியானார்கள்.
ஏற்கெனவே நிகழ்ந்த உயிரிழப்புகளைத் தொடர்ந்து, தற்போது மேலும் இரண்டு பெண்கள் உயிரிழந்திருப்பது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே சிகிச்சை பெற்று வரும் வடமாநில தொழிலாளர்களை செயற்கை நுண்ணறிவு துறை அமைச்சர் குமார் நேரில் சந்தித்து அறுதல் கூறினார்.
இந்த சம்பவத்தில், செயின்ட் பீட்டர் பால் நிறுவனத்தின் நிர்வாகி டேனியல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில், ஏற்கனவே 2 பெண்கள் பலியான நிலையில், சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.
இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது.
Hindusthan Samachar / vidya.b