Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர் 22 ஜூன் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 18 வயது இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் 11 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், மீதமுள்ள 10 பேரும் தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அம்மோனியா வாயு கசிவு சம்பவத்தில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளதால், இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam