அமோனியா வாயு கசிவு - பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை பார்வையிட ஒடிசா அரசு குழுக்கள் சென்னை வருகை
சென்னை, 22 ஜூன் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை
அமோனியா


சென்னை, 22 ஜூன் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், 16 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் தீவிரத்தை தொடர்ந்து, ஒடிசா மாநில தொழிலாளர் நலத்துறை சார்பில் இரண்டு சிறப்பு குழுக்கள் சென்னை வந்துள்ளன. அவர்கள் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் நிலையை நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.

பெரியபாளையம் தொழிற்சாலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒடிசா மாநில தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறியவும், மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

அதேபோல், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களையும் ஒடிசா அதிகாரிகள் நேரில் சந்தித்து நலன் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P