அம்மோனியா கசிவு வழக்கு- 3 பேர் கைது
திருவள்ளூர், 22 ஜூன் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா கசிவு விபத்து தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஜோசப் மோகன் (59), ராயபுரத்தைச் சேர்ந்த ஜோச
Ammo


திருவள்ளூர், 22 ஜூன் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா கசிவு விபத்து தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஜோசப் மோகன் (59), ராயபுரத்தைச் சேர்ந்த ஜோசப் ஜெகன் (49), பெருங்குடியைச் சேர்ந்த மேலாளர் டேனியல் ஆகிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் மருத்துவ பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.

பரிசோதனை முடிந்த பின்னர், அவர்களை நீதிமன்ற காவலில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூவரையும் இன்னும் சற்று நேரத்தில் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து செல்ல உள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ