அமோனியா வாயு கசிவு விபத்து- அரசின் 3 பேர் குழு ஆய்வு தொடக்கம்
திருவள்ளூர், 22 ஜூன் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்து தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசு நியமித்துள்ள 3 பேர்
Ammo


திருவள்ளூர், 22 ஜூன் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்து தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசு நியமித்துள்ள 3 பேர் கொண்ட உயர்மட்டக் குழு இன்று தனது விசாரணையை தொடங்கியது.

இந்த குழுவில் தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் மற்றும் பொதுச் சுகாதாரக் கூடுதல் இயக்குநர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

குழுவினர் சம்பவம் நடைபெற்ற தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து ஏற்பட்ட சூழல், பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்ட விதம், வாயு கசிவுக்கான காரணங்கள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளது.

இந்த ஆய்வின் அடிப்படையில், 24 மணி நேரத்திற்குள் இடைக்கால அறிக்கையையும், 3 நாட்களுக்குள் இறுதி அறிக்கையையும் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்குமாறு குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அறிக்கையின் அடிப்படையில் விபத்துக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு, பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தேவையான பரிந்துரைகளும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ