புலிவெந்துலாவில் 3 நாள் சுற்றுப்பயணம் - மக்களை நேரில் சந்திக்கிறார் ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகன் ரெட்டி
கடப்பா , 22 ஜூன் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி, நாளை முதல் தனது சொந்த தொகுதியான புலிவெந்துலாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இது குறித்து தனது அறிக்கையில்
A


கடப்பா , 22 ஜூன் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி, நாளை முதல் தனது சொந்த தொகுதியான புலிவெந்துலாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இது குறித்து தனது அறிக்கையில் அவர் கூறுவது:

ஜூன் 25-ந்தேதி வரை நடைபெறும் இந்த பயணத்தில் அவர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

நாளை மாலை புலிவெந்துலா சென்றடையும் ஜெகன், அங்குள்ள தனது முகாம் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்திக்கிறார்.

மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு மனுக்களைப் பெறும் வகையில் சிறப்பு ‘மக்கள் தர்பார்’ நிகழ்ச்சியையும் நடத்த உள்ளார்.

சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஜூன் 24-ந்தேதி காலை வேமுலா மண்டலத்தில் உள்ள பூமைய்யகாரிபள்ளி கிராமத்தின் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்து சிறப்பு பூஜைகளில் பங்கேற்கிறார்.

பின்னர் மீண்டும் புலிவெந்துலா திரும்பி, நாள் முழுவதும் மக்களையும் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேச உள்ளார்.

மேலும், ஒருங்கிணைந்த கடப்பா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொள்கிறார்.

இதனைத் தொடர்ந்து, தனது 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஜூன் 25-ந்தேதி காலை புலிவெந்துலாவில் இருந்து ஜெகன் மோகன் ரெட்டி புறப்பட்டுச் செல்கிறார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA