Enter your Email Address to subscribe to our newsletters

ராணிப்பேட்டை, 22 ஜூன் (ஹி.ச.)
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள புதுப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா (32) இவர் இரண்டு பசு மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல் வீட்டின் பின்புற கொட்டகையில் கட்டி இருந்த இரண்டு பசு மாடுகள் காணாமல் போனதை கண்டு பவித்ரா அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக பவித்ரா ஆற்காடு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் திருடு போன நாடுகள் தொடர்பாக விசாரணையில் இறங்கினர். அதில் புதுப்பாடி ஜி எம் நகர் பகுதியைச் சேர்ந்த சத்யா (29), கண்ணன் (64) ஆகிய இருவர் இரவு நேரங்களில் மாடுகளை திருடி விற்பனை செய்து சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர்.
அதன்படி போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் பவித்ராவின் மாடுகள் திருடி விற்பனை செய்து இருந்த நிலையில் அதனை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
இரவு நேரத்தில் மாடுகள் திருடு சுக வாழ்க்கையை வாழ்ந்து வரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாடுகள் வைத்து பிழைப்பு நடத்தும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN