பிரதமராக மோடி 12 ஆண்டுகள் நிறைவு - சட்டப்பேரவையில் பாராட்டு தெரிவிக்க பாஜக எம்எல்ஏ போஜராஜன் கோரிக்கை
சென்னை, 22 ஜூன் (ஹி.ச) பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக 12 ஆண்டுகளை நிறைவு செய்து, 4399 நாட்கள் பதவி வகித்ததன் மூலம் நாட்டின் நீண்டகாலம் தொடர்ச்சியாகப் பிரதமராகப் பதவி வகித்த தலைவர்கள் வரிசையில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். இந்த ந
BJP MLA Bhojarajan requests


சென்னை, 22 ஜூன் (ஹி.ச)

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக 12 ஆண்டுகளை நிறைவு செய்து, 4399 நாட்கள் பதவி வகித்ததன் மூலம் நாட்டின் நீண்டகாலம் தொடர்ச்சியாகப் பிரதமராகப் பதவி வகித்த தலைவர்கள் வரிசையில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 12 ஆண்டுகளாக பிரதமர் பொறுப்பில் இருந்து சாதனை படைத்துள்ளதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் தெரிவித்துள்ளார்.

இன்று சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர்,

நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்கள் நலனுக்காகவும் இடைவிடாது பணியாற்றி வரும் பிரதமர் மோடியின் நீண்டகால சேவையை அங்கீகரிக்கும் வகையில், அவையில் அதிகாரப்பூர்வமாக பாராட்டு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மோடியின் தலைமையில் இந்தியா உலக அரங்கில் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், அவரது 12 ஆண்டு கால ஆட்சி நிர்வாகத் திறனுக்கும் அர்ப்பணிப்புக்கும் சான்றாக அமைந்துள்ளதாகவும் போஜராஜன் குறிப்பிட்டார்.

எனவே, பிரதமரின் இந்த சாதனையை போற்றி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்று அவர் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

மேலும் தனது உரையின்போது, அவையின் மூத்த உறுப்பினர் என்ற முறையில் முதலமைச்சருக்கு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளையும் போஜராஜன் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b