Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர் 22 ஜூன் (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே 9 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியிடம், அதே பகுதியைச் சேர்ந்த விஜய கணபதி என்ற இளைஞர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில் சிறுமியின் கையைப் பிடித்து இழுத்து தொல்லை கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்த கிராம மக்கள், கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் இளைஞரை மடக்கிப் பிடித்து வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து சிங்கப்பெண் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிங்கப்பெண் படை உதவி ஆய்வாளர் லிடியா செல்வி தலைமையிலான குழுவினர், விஜய கணபதியை கைது செய்து நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதற்கிடையில், காவல்துறையினர் வருவதற்கு முன்பு கிராம மக்கள் அந்த இளைஞரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. சிறுமியிடம் பாலியல் தொல்லை நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நெல்லிக்குப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam