Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 22 ஜூன் (ஹி.ச.)
சர்வதேச அளவில் பிரீமியம் தர ஃபர்னிச்சர் விற்பனையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஹோம்ஸ் டூ லைஃப் (HomesToLife), தனது இரண்டாவது கிளையை கோவை திருச்சி சாலையில் திறந்துள்ளது.
பல்வேறு முன்னணி பிராண்டுகளை கையாளும் ‘ஹோம் சோன்’ (Homes Zone) நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய ஷோரூம் துவங்கப்பட்டுள்ளது.
இதில் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்குத் தேவையான உயர்தர சோபா செட்கள், டைனிங் டேபிள்கள், படுக்கையறை மரச்சாமான்கள், அலுவலக ஃபர்னிச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரீமியம் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்ட ஃபர்னிச்சர்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட முறையிலும் வழங்கப்படுகின்றன.
புதிய கிளை துவக்கத்தை முன்னிட்டு சிக்னேச்சர் கலெக்ஷன் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்கு சிறப்பு தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் ஹோம்ஸ் டூ லைஃப் இந்தியாவின் நாட்டுத் தலைவர் வருண் காந்த் மற்றும் கிளை உரிமையாளர் ராஜ் மாரப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில்,
தரமான தயாரிப்புகள், நவீன வடிவமைப்புகள் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதே எங்களின் நோக்கம்.
அனைத்து வகையான பிரீமியம் ஃபர்னிச்சர் தேவைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு வழங்கும் மையமாக இந்த ஷோரூம் செயல்படும் என்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P