உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் ,திமுக கவுன்சிலர்களால் எந்தப் பயனும் இல்லை - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேச்சு
மதுரை, 22 ஜூன் (ஹி.ச.) முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே திருநகர் எஸ்.ஆர்.வி. நகரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக மின்சாரம் மற்றும் சட்ட
Ctr


மதுரை, 22 ஜூன் (ஹி.ச.)

முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே திருநகர் எஸ்.ஆர்.வி. நகரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் தமிழக மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அசைவ விருந்தும் வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்,

முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி அமைச்சர்கள் அனைவரும் 24 மணி நேரமும் மக்களுக்காக செயல்பட்டு வருவதாகக் கூறினார். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே அரசின் நோக்கம் என்றும், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்களில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

போதைப் பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், பள்ளி மாணவர்கள் மத்தியில் குட்கா, கூல் லிப் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக கவுன்சிலர்களை காணவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.

ஆனால் எங்கள் ஆட்சியில் அப்படி இருக்காது. எம்எல்ஏவும், அமைச்சரும் மக்களுடன் இருப்பார்கள். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் கவுன்சிலர்களும் மக்களுடன் இணைந்து செயல்படுவார்கள்” என்றார்.

மதுரை மாநகராட்சியில் முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய அவர், அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை மற்றும் கழிவுநீர் வடிகால் வசதிகளை முறையாக செய்து தராத மாநகராட்சி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்தார்.

விரைவில் எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சித் தேர்தல் வரலாம். தற்போதைய திமுக கவுன்சிலர்களால் எந்தப் பயனும் இல்லை.

உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த நடவடிக்கை எடுப்போம். அதன் மூலம் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், மதுரையில் அனைத்து பகுதிகளிலும் கழிவு மேலாண்மை மையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் முதலமைச்சரால் வெளியிடப்படும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், வாரத்தில் மூன்று நாட்கள் மதுரையிலேயே தங்கி மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு நடவடிக்கை எடுப்பேன் என்றும், சட்டமன்ற அலுவலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ