Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஜூன் (ஹி.ச.)
சென்னை மேயர் பிரியா தொடர்பாக அண்மையில் எழுந்த சர்ச்சைக்கு தமிழக சட்டப்பேரவையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
திரு.வி.க. நகர் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு மரபுகள் மற்றும் முன்னுரிமை விதிகள் (Protocol) தொடர்பாக ஏற்பட்ட விவாதம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் பேசிய சபாநாயகர்,
நிகழ்வில் அரசு மரபுகள் பின்பற்றப்பட்ட விதம் குறித்து விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, மேயர் பிரியா மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அக்கட்சியின் எக்ஸ் பதிவில்,
சமூக வலைதளங்களில் மேயர் பிரியாவை விமர்சித்தவர்களுக்கு சபாநாயகரின் விளக்கம் பதிலளிப்பதாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அரசு நெறிமுறைகள் குறித்து முழுமையான புரிதல் இல்லாமல் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டதாகவும் அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P