Enter your Email Address to subscribe to our newsletters

நாகப்பட்டினம், 22 ஜூன் (ஹி.ச.)
நாகப்பட்டினம் மாவட்டம் அத்திபுலியூரில், தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு சங்கக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருவோடு ஏந்தியும், வாழை இலையில் மண் வைத்து தின்றும் விவசாயிகள் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
மேலும், அரைநிர்வாணத்துடன் கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்கள், தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நாகை, கீழ்வேளூர், திருமருகல், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam