தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி - ஈரோட்டில் குப்பைகள் தேக்கம்
ஈரோடு, 22 ஜூன் (ஹி.ச.) தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் மாநகராட்சியின் முடிவைக் கண்டித்து, ஈரோடு மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணிகளை முழுமையாகப் புறக்கணித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான தூய்மைப் பணிய
Impact of sanitation workers' strike: Garbage piles up in Erode


ஈரோடு, 22 ஜூன் (ஹி.ச.)

தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் மாநகராட்சியின் முடிவைக் கண்டித்து, ஈரோடு மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணிகளை முழுமையாகப் புறக்கணித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் ஒன்றிணைந்து நடத்தும் இந்தப் போராட்டத்தால், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அத்தியாவசிய தூய்மைப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்தால் தங்களது வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் பறிபோகும் என அச்சம் தெரிவிக்கும் பணியாளர்கள், தனியார்மய நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் எனவும், தங்களை நிரந்தரப் பணியாளர்களாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் வேலைநிறுத்தம் காரணமாக முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் சந்தைகளில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

மாநகராட்சி நிர்வாகம் தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகத் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b