Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 22 ஜூன் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குட்கா பான்மசாலா விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனை செய்ய அறிவுறுத்தினார்.
ஏரிகரை மூலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாகனத் தணிக்கையின் போது திருவேங்கடம் என்பவரது இருசக்கர வாகனத்தை பிடித்து சோதனை செய்தபோது அதில் 5 கிலோ குட்கா பான் மசாலாவும் 49,870 ஆயிரம் ரொக்க பணம் இருந்துள்ளது.
அதேபோல் ஆனந்தன் என்பவரின் பெட்டிக்கடையில் சோதனை செய்த போது ஒரு கிலோ மதிப்புள்ள குட்கா பான் மசாலா இருந்துள்ளது.
இதனை தொடர்ந்து திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் வீடு ஒன்று எடுத்து சுமார் 144 கிலோ எடை கொண்ட பத்துக்கும் மேற்பட்ட மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த குட்காவையும் போலிசார் பறிமுதல் செய்தனர்.
திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து குட்கா பான்மசாலா விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து சோதனை செய்த போது அஜித்(21), திருமலை(27) ஆகிய இருவர் பெங்களூரில் இருந்து குட்கா பான் மசாலா பொட்டலங்களை எடுத்து வந்து புறவழிச்சாலையில் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து, மறைத்து வைத்து திருக்கோவிலூர் சுற்றியுள்ள பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.
நான்கு பேரையும் கைது செய்த போலீசார் மொத்தமாக 150 கிலோ எடை கொண்ட 5 லட்சம் மதிப்பிற்கான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பால் மசாலா பொட்டலங்களையும் 49, 870ரூபாய் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் இன்று ஒரே நாளில் நடைபெற்ற திடீர் சோதனையில் குட்கா பான் மசாலா மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN