தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை - 3 பேர் கைது
கன்னியாகுமரி, 22 ஜூன் (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கோட்டார் காவல் நிலையம்
Kottar Police Station


கன்னியாகுமரி, 22 ஜூன் (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது கோட்டார் காவல் நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டில் இருந்து சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த ஏராளமான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றின் மதிப்பு மற்றும் எண்ணிக்கை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என மொத்தம் நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவர்களில் மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஜோனு என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN