Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு , 22 ஜூன் (ஹி.ச.)
மேகதாது அணைத் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மத்திய கனரக தொழில்கள் துறை மந்திரி குமாரசாமி வலியுறித்துள்ளார்.
மண்டியாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
மேகதாது திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு இப்போது மட்டுமல்ல, கடந்த பல ஆண்டுகளாகவே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளாக இந்த பிரச்சினை தொடர்ந்து இருந்து வருகிறது.
சில ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. அணைகள் நிரம்பாத சூழலில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தக் கூடாது. உண்மையான நிலவரத்தை தமிழ்நாடு அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
நாம் அண்ணன்–தம்பிகளைப் போல இணக்கமாக இருக்க வேண்டும். கர்நாடகாவின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். மத்திய அரசுகள் இதுவரை இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணவில்லை.
நமது மாநில மக்களின் நிதியிலேயே அணைகள் கட்டப்பட்டுள்ளன. தேவகவுடா பிரதமராக இருந்த காலம் வரை அணைகள் கட்ட மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. தற்போது உள்ள அணைகள் அனைத்தும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கும் நிலைக்கு மாறிவிட்டன.
பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார நகரங்களுக்கு குடிநீர் வழங்கும் நோக்கத்திலேயே மேகதாது அணை திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேகதாது திட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA