தெரு நாய் தாக்குதல் - 6 வயது சிறுவனை காப்பாற்ற முதல் மாடியில் இருந்து குதித்த தாய் மாமா
கேரளம், 22 ஜூன் (ஹி.ச.) கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஆழங்கோடு பகுதியில், வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனை தெரு நாய் ஒன்று திடீரென தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தப
நாய்


கேரளம், 22 ஜூன் (ஹி.ச.)

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஆழங்கோடு பகுதியில், வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனை தெரு நாய் ஒன்று திடீரென தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த தெரு நாய் ஒன்று அவனை விரட்டிச் சென்று பலமுறை கடித்ததாக கூறப்படுகிறது.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டின் முதல் மாடியில் இருந்த அவரது தாய் மாமா உடனடியாக கீழே குதித்து சிறுவனை மீட்க முயன்றார்.

அப்போது ஆவேசமாக இருந்த நாய், சிறுவனை காப்பாற்ற வந்த தாய் மாமாவையும் கடித்துத் தாக்கியது. இருப்பினும், அவர் துணிச்சலுடன் நாயை விரட்டியடித்து சிறுவனை பாதுகாப்பாக மீட்டார்.

இந்த தாக்குதலில் சிறுவனும், அவரது தாய் மாமாவும் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

முதல் மாடியில் இருந்து குதித்து சிறுவனை காப்பாற்றிய தாய் மாமாவின் செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P