Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 22 ஜூன் (ஹி.ச.)
சேலம் மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக நீர்வரத்து சற்று குறைந்த போதிலும், அணையின் நீர்மட்டம் மற்றும் நீர் இருப்பு ஏறுமுகத்தில் உள்ளது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து வினாடிக்கு 1790 கன அடியில் இருந்து 1569 கன அடியாக சரிந்துள்ளது.
ஆனால் நீர்வரத்து குறைந்தாலும், அணையின் நீர்மட்டம் 79.26 அடியில் இருந்து 79.29 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் மொத்த நீர் இருப்பு 41.25 டிஎம்சி ஆக பதிவாகியுள்ளது.
இதனிடையே டெல்டா பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் முழு கொள்ளளவு 120 அடி என்ற நிலையில், தற்போதைய நீர்மட்ட உயர்வு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b