Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஜூன் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் கடல் உணவு பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டத்தில் பலி 5 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 10-க்கும் மேற்பட்டோர் இன்னும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையில் தமிழக சட்டப்பேரவையில் திருவள்ளூர் விபத்து குறித்து இன்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் விதி எண் 110-ன் கீழ் விளக்கமளித்தார்.
சட்டப்பேரவையில் அவர் கூறியதாவது,
திருவள்ளூர் அமோனியா வாயு கசிவால் 70 பெண்கள், 4 ஆண்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 36 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 27 பேர் சாதாரண சிகிச்சையில் உள்ளனர். இதில் 5 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்த தொழிலாளர்களின் உடல் அரசு செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கான செலவை அரசே மேற்கொள்ளும். தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎஃப் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
என்று கூறினார்.
அமைச்சரின் விளக்கத்துக்கு முன்னதாகவே தங்களைப் பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரி திமுக, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனாால் அவையில் சிறிதுநேரம் சலசலப்பும் ஏற்பட்டது.
Hindusthan Samachar / vidya.b