Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 22 ஜூன் (ஹி.ச.)
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர்,
முதல்வர் நாற்காலி மட்டுமே மாறியுள்ளதே தவிர, இந்து விரோத ஆட்சி மாறவில்லை என்று குற்றம்சாட்டினார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றுவது தமிழர் பண்பாட்டு உரிமை என்றும், அதை தடுக்க முயற்சிப்பது மக்களின் மத உணர்வுகளுக்கு எதிரானது என்றும் அவர் கூறினார்.
மேலும், முந்தைய ஆட்சியின் நிலைப்பாட்டையே தற்போதைய அரசும் தொடர்வதாக விமர்சித்த அவர், மக்களின் மத உரிமைகளை எந்த ஆட்சியும் நிரந்தரமாக முடக்க முடியாது; இறுதியில் நீதி வெல்லும் எனத் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் மீண்டும் ஒளிரும் என்ற நம்பிக்கை தமிழக மக்களிடம் இருப்பதாகவும், தமிழர் பண்பாட்டு உரிமை பாதுகாக்கப்படும் என்றும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P