இந்தியா தலைமையில் பிரிக்ஸ் எரிசக்தி மந்திரிகள் மாநாடு- 11 நாடுகள் பங்கேற்பு
புதுடெல்லி , 22 ஜூன் (ஹி.ச.) இந்தியா தலைமையில் 2026-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் எரிசக்தி மந்திரிகள் பங்கேற்கும் மாநாடு, ஹரியானா மாநிலம் குருகிராமில் வருகிற ஜூன் 25 மற்றும் 26-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. கடந்த 2012, 2016 மற்றும் 2021-
A


புதுடெல்லி , 22 ஜூன் (ஹி.ச.)

இந்தியா தலைமையில் 2026-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் எரிசக்தி மந்திரிகள் பங்கேற்கும் மாநாடு, ஹரியானா மாநிலம் குருகிராமில் வருகிற ஜூன் 25 மற்றும் 26-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

கடந்த 2012, 2016 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் இந்தியா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டைத் தொடர்ந்து, 2026-ம் ஆண்டில் இந்தியா நான்காவது முறையாக பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்துகிறது.

மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடைபெறும் இந்த மாநாட்டில், அனைவருக்கும் எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்வது தொடர்பாக உறுப்பு நாடுகளின் கூட்டு முயற்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும் எரிசக்தி பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களின் பயன்பாடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்களும் விவாதிக்கப்பட உள்ளன.

பிரிக்ஸ் அமைப்பில் தற்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 11 நாடுகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA