தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பிறந்தநாள் - ராகுல் காந்தி வாழ்த்து
இந்தியா, 22 ஜூன் (ஹி.ச.) தமிழக முதலமைச்சர் விஜய்க்கு ராகுல் காந்தி தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது; தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள
ராகுல் காந்தி


இந்தியா, 22 ஜூன் (ஹி.ச.)

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு ராகுல் காந்தி தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது;

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியுடனும் திகழ வாழ்த்துகிறேன். தமிழ் மக்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் அபிலாஷைகளைப் பாதுகாப்பதிலும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவதிலும் நான் உங்களுடன் உறுதுணையாக நிற்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ள நிலையில், விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P