800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், நாட்டுப்படகுகளும் நங்கூரமிட்டு நிறுத்தம்
ராமநாதபுரம், 22 ஜூன் (ஹி.ச.) ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும் 100க்கும் மேற்பட்ட நாட்டுபடகுகளிலும் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்தை
Fishermen Protest


ராமநாதபுரம், 22 ஜூன் (ஹி.ச.)

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும் 100க்கும் மேற்பட்ட நாட்டுபடகுகளிலும் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதோடு கடல் அலைகள் ஆக்ரோசத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து ராமேஸ்வரம் பகுதியில் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டு படகு மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதனால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 700க்கும் மேற்பட்ட விசைப்படகும், 100க்கும் மேற்பட்ட நாட்டுபடகுகளும் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாது நாள் ஒன்றுக்கு பத்து கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லாததால் மறைமுகமாகவும் நேரடியாகவும் 5000க்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலை சார்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN