ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நடை நாளை மூடுவதாக அறிவிப்பு
ராமநாதபுரம், 22 ஜூன் (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் வரலாற்றினை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறும். இன்று திருவிழாவின் முதல் நாள் ராவணன் சம்ஹாரம் நிகழ்ச்சி மாலை நட
Rameshwaram Temple


ராமநாதபுரம், 22 ஜூன் (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் வரலாற்றினை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறும்.

இன்று திருவிழாவின் முதல் நாள் ராவணன் சம்ஹாரம் நிகழ்ச்சி மாலை நடைபெறுகிறது. நாளை ஜூன் 23-ம் தேதி இரண்டாம் நாள் திருவிழா கோதண்டராமர் கோவிலில் ராமர் ராவணனை தம்பி விபீஷணருக்கு இலங்கை மன்னாராக அறிவித்து முடிசூட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனால் காலை 7 மணிக்கு ராமநாதசுவாமி கோவில் நடை அடைக்கப்பட்டு ராமநாதசுவாமி - பர்வதவரத்தினி அம்மன் தனது பரிவாரங்களுடன் கோதண்டராமர் கோவில் செல்கின்றனர்.

இதன் காரணமாக காலை 7 மணிமுதல் மாலை 5 மணி ராமநாதசுவாமி கோவில் நடை சாத்தப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிப்படமாட்டாது.

பக்தர்கள் தங்களுடைய தரிசன நேரத்தினை மாற்றிக்கொள்ள கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN