Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 22 ஜூன் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த முகமது பாட்ஷா (32) என்பவர், அதே பள்ளியில் படித்து வந்த 17 வயது மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து மாணவிக்கு உடல்நலக்குறைவு மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதால், சந்தேகமடைந்த பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முகமது பாட்ஷாவை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பள்ளிக்கு கல்வி கற்கச் சென்ற சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி கர்ப்பமான சம்பவம் ஊத்துக்குளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam