Enter your Email Address to subscribe to our newsletters

கோவை , 22 ஜூன் (ஹி.ச.)
கோவையில், சிறுத்துளி அமைப்பு, கோவை மாநகராட்சி மற்றும் பி.எஸ்.ஜி. குழுமம் இணைந்து காந்திமா நகர் ஓடை சீரமைப்பு திட்டத்தைத் தொடங்கியது உங்கள் கழிவைக் கவனியுங்கள் எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நீர் நிலைகளை மீட்கும் பணிகளில்,
கடந்த 2003ஆம் ஆண்டு முதல் கோவையை சேர்ந்த சிறுதுளி அமைப்பு செயல்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் கோவை மாநகரின் முக்கிய நகர்ப்புற நீர்வழித்தடங்களில் ஒன்றான காந்திமா நகர் ஓடையானது காந்திமா நகர் காவல் நிலையம் அருகே தோன்றி, பன் மால், பி.எஸ்.ஜி. மருத்துவமனை, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகள் வழியாக சுமார் 13.5 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து இறுதியில் இருகூர் ஏரியில் கலக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக கழிவுநீர் கலப்பு, திடக்கழிவுகள் கொட்டப்படுதல், ஆக்கிரமிப்பு தாவரங்கள் வளர்ச்சி மற்றும் ஓடையின் கரைகள் சேதமடைதல் போன்ற காரணங்களால், துர்நாற்றம், நீரின் தரம் குறைதல், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் கீழ்மட்ட நீர்நிலைகளுக்கு அச்சுறுத்தல் போன்ற பிரச்சினைகள் உருவாக்கியிருந்தது இதனைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சி, பி.எஸ்.ஜி. குழுமம் மற்றும் சிறுத்துளி இணைந்து ஓடையை புனரமைக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
முதல் கட்டமாக 3.5 கிலோமீட்டர் நீளப்பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது
இத்திட்டத்தின் கீழ் திடக்கழிவுகள் மற்றும் வண்டல் அகற்றுதல், கரைகளை வலுப்படுத்த இயற்கை மரங்கள் மற்றும் தாவரங்கள் நடுதல், இயற்கை சார்ந்த நீர் சுத்திகரிப்பு முறைகள் அமைத்தல் மற்றும் நீர்தரத்தை தொடர்ந்து கண்காணித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுகின்றன.
இந்தப் புனரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக உங்கள் கழிவைக் கவனியுங்கள் என்ற பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை ஜி.வி. ரெசிடென்சியில் நடைபெற்றது.
ஓடைகள் மற்றும் நீர்நிலைகளில் திடக்கழிவுகளை கொட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டதுணன் சாலைகளின் ஒரங்களில் கொட்ட பட்டு இருந்த பல்வேறு கழிவுகளை, பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி மாணவர்களுடன் இனைந்து சுத்தம் செய்ய பட்டது. இதில் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தாமாக முன் வந்து குப்பைகளை சாலையின் ஒரங்களில் கிடந்த குப்பைகளை அகற்றி முன்னுதாரணமாக திகழ்ந்தார்.
இந்நிகழ்ச்சியில் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். கிரி பிரசாத், பி.எஸ்.ஜி. சன்ஸ் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், சிறுத்துளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், சிறுத்துளி அறங்காவலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA