தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, 22 ஜூன் (ஹி.ச.) ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் 3.1 கிலோ மீட்டர் மற்றும் 4.5 கிலோ மீட்டர் உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவுகிறது. இந்த நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, திண்டுக
மழை


சென்னை, 22 ஜூன் (ஹி.ச.)

ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் 3.1 கிலோ மீட்டர் மற்றும் 4.5 கிலோ மீட்டர் உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவுகிறது.

இந்த நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் 40 கிலோ மீட்டர் வேக காற்றுடன் கன மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் 27 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யக் கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 25 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியும் இயல்பை விட குறைந்தும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P