Enter your Email Address to subscribe to our newsletters

தெலுங்கானா, 22 ஜூன் (ஹி.ச.)
ஜயஷங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில் பணியில் இருந்த மாவட்ட போக்குவரத்து அலுவலர் (DTO) எம். வெங்கண்ணா, நிலக்கரி ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த துயரச் சம்பவம் இன்று காலை சனிபேட்டை அருகே செல்லபூர் பகுதியில் நடைபெற்றது.
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வெங்கண்ணா மீது, அவ்வழியாக வந்த நிலக்கரி லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அவர்கள் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது அறிக்கையல் அவர் கூறியதாவது :
சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த போக்குவரத்து துறை இணை ஆணையருக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.
விபத்து குறித்து விரிவான அறிக்கையை விரைவில் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
அதேசமயம், உயிரிழந்த வெங்கண்ணாவின் குடும்பத்துக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
என்றும் அந்த அறிக்கை மூலம் முதல்வர் உறுதியளித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA