சுற்றுலா பயணிகளை குறி வைத்து கஞ்சா விற்பனை - இரண்டு இளைஞர்கள் கைது
தென்காசி, 22 ஜூன் (ஹி.ச.) தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசனானது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் போதை பொருட்கள் சில மர்ம நபர்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்
Courtallam Police Station


தென்காசி, 22 ஜூன் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசனானது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் போதை பொருட்கள் சில மர்ம நபர்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், குற்றாலம் பகுதியில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், பழைய குற்றாலத்தில் இருந்து குற்றாலம் செல்லும் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த இரண்டு இளைஞர்களை மடக்கி சோதனை செய்துள்ளனர்.

அப்பொழுது, அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வரவே அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்திய போது,அவர்கள் தென்காசி பகுதியை சேர்ந்த அப்துல் ஹாலித் மற்றும் தவ்பிக் என்பதும், அவர்கள் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்த நிலையில், அவர்களிடம் இருந்து சுமார் ரூபாய் 1.50 லட்சம் மதிப்பிலான 3 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, சுற்றுலாத்தளமான குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN