Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 22 ஜூன் (ஹி.ச.)
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் புகையிலை பொருட்கள் மற்றும் போதை வஸ்துக்களை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் தென்காசி நகர் பகுதியில் தென்காசி காவல் ஆய்வாளர் ராபர்ட் ஜெயின் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நகர் பகுதியில் அமைந்துள்ள கூரைக்கடையை அருகே இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான நபரை பிடித்து சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
தொடர் விசாரணையில் சுந்தரபாண்டிபுரம் பகுதியைச் சார்ந்த பாலகிருஷ்ணன் என்பதும் தெரியவந்த நிலையில், அவரது வீட்டை காவல் துறையினர் சோதனை செய்தபோது மூட்டை மூட்டையாக சுமார் 525 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கியது.
அதனை கைப்பற்றிய காவல்துறையினர் பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி பகுதியில் 1/2 டன் புகையிலை பொருட்கள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
Hindusthan Samachar / ANANDHAN