திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் - இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
மதுரை, 22 ஜூன் (ஹி.ச.) மதுரை பழங்காநத்தம் டவுண்டானம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலைகண்ணன் தலைமை தாங்கினார். திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி கார்த்திகை
ஆர்ப்பாட்டம்


மதுரை, 22 ஜூன் (ஹி.ச.)

மதுரை பழங்காநத்தம் டவுண்டானம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலைகண்ணன் தலைமை தாங்கினார்.

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி கார்த்திகை தீபம் ஏற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாக, 2005ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட வீரத்தியாகி ஏ.ஆர். காளிதாஸ் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கும், தீபம் ஏற்றும் உரிமைக்காக உயிர்தியாகம் செய்ததாக கூறப்படும் பூர்ணசந்திரனின் உருவப்படத்திற்கும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் புலிகொடிவேந்தன் கே.சி. திருமாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மேலும் சிவசேனா மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ், இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் பாம்பன் பாலன், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் மாநில பொறுப்பாளர் மருது ஆனந்த், அனுமன் சேனா நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் திருப்பரங்குன்றத்தில் நீதிமன்ற உத்தரவின்படி கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும், கோயில் அறங்காவலர் நியமனங்களில் பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், நவோதயா மற்றும் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை அனுமதிக்க வேண்டும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam