Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 22 ஜூன் (ஹி.ச.)
உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தளமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழக தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் 1008 பெண்கள் பால்குடம் ஏந்தி கோவிலின் நான்கு மாட வீதிகளை சுற்றி வந்து வழிபாடு செய்தனர்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபடுதல், விளையாட்டுப் போட்டிகள், நலத்திட்ட உதவிகள், பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தல், பால்குடம் ஏந்தி வந்து சாமிக்கு அபிஷேகம் செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது,
இந்நிலையில் இன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் ராஜகோபுரம் முன்பு தெற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் 1008 பெண்கள் பால்குடம் ஏந்தியவாறு கோவிலின் நான்கு மாட வீதிகளான தேரடி வீதி, திரு ஊடல் வீதி, பே கோபுர வீதி, பெரிய தெரு ஆகிய நான்கு மாட வீதிகளை சுற்றி வந்து கம்பத்திலையனார் முருகருக்கு காட்சி தந்த சன்னதியில் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலின் நான்கு மாட வீதியில் பால்குடம் ஏந்தி வந்த ஊர்வலத்தின் போது பெண் ஒருவருக்கு சாமி வந்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / ANANDHAN