Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 22 ஜூன் (ஹி.ச.)
மேற்கு வங்கத்தின் அரசியல் வரலாறு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகளுக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் முழு ஆதரவு தெரிவித்தார்.
இது குறித்து இன்று பாட்டனாவில் செய்தியாளர்களிடம் பேசிய கிரிராஜ் சிங் கூறுகையில்,
பிரிவினை காலத்தில் சியாமா பிரசாத் முகர்ஜிதான் வங்கத்தைக் காப்பாற்றினார். ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், 1946ஆம் ஆண்டு ‘நேரடி நடவடிக்கை நாள்’ என்ற பெயரில் இந்துக்கள் மீது நடந்த படுகொலைகள், தாக்குதல்களின் வடுக்கள் தொடர்ந்தன.
காங்கிரஸ் தாஜா அரசியலில் ஈடுபட்டு வங்கத்தை அதன் தலைவிதிக்கே விட்டுவிட்டது. இறுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கொள்ளையடித்து அந்த மாநிலத்தை கிட்டத்தட்ட அழித்துவிட்டது. இப்போது பாஜக வந்துள்ள நிலையில், அங்குள்ள மக்கள் இதை இரண்டாவது சுதந்திரம் போல கொண்டாடுகிறார்கள்.
வெறும் செருப்பும் சேலையும் அணிந்த எளிமையானவர் என தன்னை காட்டிக்கொண்ட மம்தா பானர்ஜி, உண்மையில் அமைச்சர்கள் முதல் அனைவரும் ஈடுபட்ட கொள்ளை ஆட்சியை நடத்தி வந்தார். அது இப்போது அம்பலமாகி வருகிறது.
கடந்த ஜூன் 20ஆம் தேதி, மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டம் தாரகேஸ்வரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது மேற்கு வங்க நாளின் முக்கியத்துவத்தையும், மாநில உருவாக்கத்தைச் சுற்றிய வரலாற்று நிகழ்வுகளையும் இளைய தலைமுறைக்கு எடுத்துரைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய தலைமுறைக்கு மேற்கு வங்க நாளின் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும். அந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை இளைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டும். ஒருங்கிணைந்த வங்கத்தை முழுவதுமாக பாகிஸ்தானின் பகுதியாக்க முயற்சி நடந்தது.
அந்த சதிகாரர்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவணங்கியது. அந்த நேரத்தில்தான் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி அதற்கு எதிராக குரல் எழுப்பினார். 1947 ஏப்ரலில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றினார். முழு வங்கமும் பாகிஸ்தானின் பகுதியாக மாறாது என்று அறிவித்தார். இதற்காக வங்காள இந்து தாயக இயக்கம் தொடங்கப்பட்டது.
மேற்கு வங்க நாளின் முக்கியத்துவம் அரசியல் காரணங்களால் பல ஆண்டுகளாக குறைத்து மதிப்பிடப்பட்டதாகவும் மோடி குறிப்பிட்டார்.
சியாமா பிரசாத் முகர்ஜி போன்ற தலைவர்களின் பங்களிப்புகள் சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசியல் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தும், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b