Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 22 ஜூன் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில்,
கொப்பரை கிலோ ஒன்றுக்கு 180 ரூபாய், தேங்காய் ஒரு கிலோவிற்கு 60 ரூபாய், உரிக்காமல் தேங்காய் கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் என விலை நிர்ணயம் செய்திட வேண்டும்.
தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை அரசே கொள்முதல் செய்து அரசு நியாயவிலை கடைகள் மூலமாக மக்களுக்கு வழங்கிய வேண்டும்.
தென்னை விவசாயத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு முழு காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.
தென்னையை தாக்கும் ஈ, வாடல் நோய்,வேர்ப் புழு தாக்குதலை கட்டுப்படுத்த அரசு உதவியைக் கோரியும்
மாவட்டத் தலைவர் லெனின்குமார் தலைமையில் தேங்காய்களை உடைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுந்தன. ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN