Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 22 ஜூன் (ஹி.ச.)
யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம், கோயம்புத்தூரில் உள்ள கோஸ்ட் உயர் செயல்திறன் மையத்தில் தனது வாடிக்கையாளர்களுக்காக டிராக் டே என்ற பிரத்யேக நிகழ்ச்சியை நடத்தியது.
யமஹாவின் தி கால் ஆஃப் தி ப்ளூ பிராண்ட் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், 200-க்கும் மேற்பட்ட யமஹா வாகன ஓட்டிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் R15, MT-15 மற்றும் XSR155 ஆகிய வாகனங்களின் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
இவர்களுக்கு, மோட்டார் சைக்கிளைக் கட்டுப்படுத்துதல், வளைவுகளில் வாகனத்தைச் சரியாக ஓட்டுதல் மற்றும் பாதுகாப்பான ஓட்டுதல் முறைகள் குறித்து நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த 'டிராக் டே' பயிற்சியானது, ஓட்டிகளுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுதலின் நுணுக்கங்களை நேரடியாகக் கற்றுக்கொள்ளவும், தங்களின் ஓட்டுதல் திறனை மேம்படுத்தவும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
எக்ஸ்ப்ளோர் இந்தியா ஆன் எக்ஸ்.எஸ்.ஆர்
இந்த நிகழ்வு, யமஹாவின் 'எக்ஸ்ப்ளோர் இந்தியா ஆன் எக்ஸ்.எஸ்.ஆர்' பிரச்சாரத்தின் ஒரு அங்கமாகும்.
நாடு முழுவதும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு பின்னணிகளைக் கொண்ட ஓட்டிகளை ஒன்றிணைக்கும் இந்த பயணம், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நிலப்பரப்பைக் கொண்டாடும் ஒரு அடையாளப் பயணமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
யமஹாவின் நவீன-ரெட்ரோ ஸ்போர்ட் XSR155 மோட்டார் சைக்கிள், இந்த சாகசப் பயணத்தில் ஓட்டிகளுக்கு உறுதுணையாகப் பயணித்து வருகிறது.
இந்த முன்னெடுப்புகள் குறித்து யமஹா நிறுவனம் கூறுகையில்,
இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம், யமஹா தனது வலுவான பந்தய பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதோடு, வாடிக்கையாளர்களிடையே ஒரு ஆழமான சமூக பிணைப்பை வளர்க்கிறது.
மோட்டார் சைக்கிள் மீதான ஆர்வத்தால் ஒன்றுபட்ட ஓட்டிகளை இணைப்பதன் மூலம், யமஹாவின் 'ப்ளூ ஸ்ட்ரீக்ஸ்' சமூகத்தை மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / Durai.J