வீட்டு பணிப்பெண் மற்றும் அவரது மகனை சிறைபிடித்ததாக புகார்- நடிகர் ரவி மோகன் வீட்டில் போலீசார் விசாரணை
சென்னை, 23 ஜூன் (ஹி.ச.) சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள நடிகர் ரவி மோகன் வீட்டில் பணியாற்றச் சென்ற வீட்டு பணிப்பெண் மற்றும் அவரது மகன் வீடு திரும்பவில்லை என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இத
Ravi


சென்னை, 23 ஜூன் (ஹி.ச.)

சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள நடிகர் ரவி மோகன் வீட்டில் பணியாற்றச் சென்ற வீட்டு பணிப்பெண் மற்றும் அவரது மகன் வீடு திரும்பவில்லை என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது,

இரண்டு பணிப்பெண்கள் மற்றும் அவர்களில் ஒருவரின் மகன் வீட்டிற்குள் தங்கவைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, வீட்டில் திருட்டு சம்பவம் நடைபெற்றதாக நடிகர் ரவி மோகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து போலீசார், யாரையும் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தவோ அல்லது தடுத்து வைக்கவோ கூடாது என்றும், திருட்டு தொடர்பாக சந்தேகம் இருந்தால் காவல் நிலையத்தில் முறையான புகார் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் உரிய புகார் அளிக்குமாறு நடிகர் ரவி மோகன் தரப்பினரிடம் போலீசார் அறிவுறுத்திவிட்டு சென்றதாக தகவல் தெரிவிக்கிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P