சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம் - ஆதிதிராவிடர் நலத்துறை அறிவிப்பு
சென்னை, 23 ஜூன் (ஹி.ச.) சாதிப் பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு தலா 1 கோடி ரூபாய் ஊக்கத் தொகையும் அதனுடன், சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதும் வழங்கி தமி
சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற  ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம் - ஆதிதிராவிடர் நலத்துறை அறிவிப்பு


சென்னை, 23 ஜூன் (ஹி.ச.)

சாதிப் பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு தலா 1 கோடி ரூபாய் ஊக்கத் தொகையும் அதனுடன், சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதும் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.

இதனடிப்படையில் 2026-27 ஆம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்பும் ஊராட்சிகள் விண்ணப்ப படிவத்தினையும், அதற்குரிய ஆவணங்களையும் இணைத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 31.07.2026க்குள் சமர்ப்பிக்குமாறு ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இவ்விருதிற்கான விண்ணப்ப படிவத்தினை ttps://cms.tn.gov.in/cms_migrated/document/forms/social award_app_26_27.pdf என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b