Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூன் (ஹி.ச.)
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலாளர் அலீம் அல் புகாரிக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் துணைத் தலைவராக அலீம் அல் புகாரியை நியமித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தேர்தலுக்குப் பின்னர் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக உடன் கூட்டணி அமைத்த முடிவை அலீம் அல் புகாரி கடுமையாக விமர்சித்திருந்தார்.
டெல்லி, மகாராஷ்டிராவில் இதுபோன்ற கூட்டணி முடிவுகளால் காங்கிரஸ் காணாமல் போனதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி அவரை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்தது.
இதன் தொடர்ச்சியாக காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்த அலீம் அல் புகாரி, திமுகவில் இணைந்தார்.
திமுகவில் இணைந்த சில நாட்களிலேயே அவருக்கு சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது கட்சி வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / vidya.b