சட்டப்பேரவையை சினிமா தியேட்டராக மாற்றிவிட்டனர் - உதயநிதி குற்றச்சாட்டு
சென்னை, 23 ஜூன் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து முதல்வர் விஜய் இன்று பதிலுரை வழங்கினார். அப்போது திமுகவுக்கு எதிராக பல்வேறு குற்ற
உதயநிதி


சென்னை, 23 ஜூன் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து முதல்வர் விஜய் இன்று பதிலுரை வழங்கினார்.

அப்போது திமுகவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள், சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டதுடன் வெளிநடப்பும் செய்தனர்.

இதையடுத்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர்,

சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டிய நிலையில், எதிர்க்கட்சிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவற்றை மக்கள் நம்பப் போவதில்லை.

மேலும், 40 நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுள்ளன.

ஆனால் அவற்றை மறைத்து அரசியல் குற்றச்சாட்டுகளை மட்டுமே முன்னிறுத்துவது ஏற்கத்தக்கதல்ல.

40 நாட்களில் என்ன சாதித்தீர்கள் என்பதை மக்கள் மதிப்பீடு செய்வார்கள் என்று தெரிவித்தார்.

தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,

அது நடைமுறை ரீதியாக ஏற்பட்ட குழப்பம் மட்டுமே என்றும், அதனை அரசியலாக்க முயற்சிப்பது தேவையற்றது என்றும் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam