அமைச்சர் நிர்மல்குமாருக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் - மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தல்
தமிழ்நாடு, 23 ஜூன் (ஹி.ச.) பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தங்கள் சொந்தக்காரர்களைக் கூட ஆளுநர்களாக நியமிக்கலாம் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்த கருத்துக்கு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
நயினார்


தமிழ்நாடு, 23 ஜூன் (ஹி.ச.)

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தங்கள் சொந்தக்காரர்களைக் கூட ஆளுநர்களாக நியமிக்கலாம் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்த கருத்துக்கு,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

அரசியலமைப்பின் அடிப்படைக் கூட தெரியாமல் அமைச்சர் பதவியில் இருப்பதாக விமர்சித்துள்ளார்.

பல ஆண்டுகளாக மக்கள் சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் மாண்பைக் குறைக்கும் வகையில் அமைச்சர் நிர்மல்குமார் பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை மறைத்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் வெறுப்பரசியல் மேற்கொள்ளப்படுவதாகவும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

அரசியல், கல்வி மற்றும் மக்கள் சேவையில் அனுபவம் வாய்ந்தவர்களையே ஆளுநர்களாக நியமித்து வருவதாகக் கூறிய அவர், பிரதமர் மீது கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைத்ததற்காக அமைச்சர் நிர்மல்குமார் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், ஆளுநர் பதவி தேவையில்லை என்று கூறுபவர்கள், தேர்தலுக்குப் பிறகு ஆட்சியமைப்பதற்காக எத்தனை முறை ஆளுநர் மாளிகையை நாடினர் என்பது குறித்து கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன்,

இதுபோன்ற

“அரசியல் ஸ்டண்ட்” நடவடிக்கைகளை இனிமேல் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் நிர்மல்குமாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P