பரங்கிப்பேட்டையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயம்
கடலூர், 23 ஜூன் (ஹி.ச.) கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு கிழக்கு தெருவைச் சேர்ந்த கல்யாணசுந்தரம்(56), ஸ்ரீகாந்த் (25) மற்றும் மாதாகோயில் தெருவைச் சேர்ந்த பாண்டியன் (56) ஆகிய 3 பேரும் கடந்த 15ம் தேதி பரங்கிப்பேட்டை
மீனவர்கள் மாயம்


கடலூர், 23 ஜூன் (ஹி.ச.)

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள

பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு கிழக்கு தெருவைச் சேர்ந்த கல்யாணசுந்தரம்(56), ஸ்ரீகாந்த் (25) மற்றும் மாதாகோயில் தெருவைச் சேர்ந்த பாண்டியன் (56) ஆகிய 3 பேரும் கடந்த 15ம்

தேதி பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் கடல் முகத்துவாரத்தில் இருந்து ஒரு படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

கடலில் மீன் பிடித்து விட்டு 16 ஆம் தேதி கரைக்கு திரும்பி வந்திருக்க வேண்டும். ஆனால், மீனவர்கள் திரும்பி வரவில்லை. இதனால் அவர்களது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து மீனவர்கள் திரும்பி வராதது குறித்து படகு உரிமையாளர் சுப்ரமணியன் கடலுார் மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதே நேரத்தில் காணாமல் போன 3 மீனவர்களையும் பரங்கிப்பேட்டை

சலங்குகார தெரு மீனவர்கள் படகில் கடலுக்கு சென்று தேடி வருகின்றனர்.

மீனவர்கள் கடலில் மாயமானால் மாவட்ட நிர்வாகமும் மீன்வளத்துறை அதிகாரிகளும் கண்டுபிடிப்பதற்கு மெத்தனமாக செயல்படுவதாகம் மீனவர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் படகுகளிலும் கடலோர காவல் படையினர் ரோந்து படங்களிலும் ஹெலிகாப்டரிலும் தேடுவதாக கூறுகின்றனர் ஆனால் நாங்கள் கடலில் அது போல் எதுவுமே பார்க்கவில்லை சுற்றி இருக்கும் மீனவர்கள் மட்டுமே மாயமான மீனவர்களை தேடி வருவதாக கூறுகின்றனர். அதனால் உடனடியாக மீன்வளத்துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகம் துரிதமான நடவடிக்கை எடுத்து மீனவர்களை மீட்டுத் தருமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்களிடம் மனு அளித்தனர்.

மேலும் முதலமைச்சர் விஜய் அவர்கள் தலையிட்டு மாயமான மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க உதவுமாறு மடிப்பு பிச்சை ஏந்தி மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்

கடந்த வாரம்தான் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் மாயமாகி கடலில் படகில் மயங்கிய நிலையில் சக மீனவர்களால் மட்டுமே மீட்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது மீண்டும் 3 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று மாயமாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் முறையிடுவதற்காக மீனவ குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் காவல்துறை தடையை மீறி உள்ளே வந்துள்ளனர்

Hindusthan Samachar / GOKILA arumugam