Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 23 ஜூன் (ஹி.ச.)
தருமபுரி மாவட்டம் தடங்கம் பகுதியில் செயல்பட்டு வரும் கணித நீதிமன்றத்திற்கு தொடர்ந்து நான்காவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொடர் மிரட்டல்களால் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.
நீதிமன்ற வளாகத்திற்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருவதால் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட நீதித்துறை நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எந்தவித கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், நீதிமன்ற நிர்வாகம் மற்றும் காவல்துறையின் மெத்தனப் போக்கை கண்டித்து தருமபுரி வழக்கறிஞர்கள் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN