Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூன் (ஹி.ச.)
சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை போன்று தமிழகம் முழுவதும் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.
சுமார் 10 வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை குழுவினர், நகரின் முக்கியப் பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சோதனை எந்த வழக்கு தொடர்பாக நடத்தப்படுகிறது, யாருடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.
ஆனால் ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் தொடர்பாக சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், மத்திய பாதுகாப்புப் படையினரின் துணையுடன் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதால், இது முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் பல இடங்களில் நடைபெறும் இந்த சோதனையால் தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிற விவரங்கள் குறித்து அமலாக்கத்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b