Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூன் (ஹி.ச.)
சென்னை வியாசர்பாடி பி.வி. காலனி பகுதியில் வசித்து வரும் கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் விநாயகமூர்த்தி தொடர்புடைய இடங்களில் இன்று அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
காலை நேரத்தில் விநாயகமூர்த்தியின் வியாசர்பாடி இல்லத்துக்குச் சென்ற அதிகாரிகள், அவர் அங்கு இல்லாததால் அவரது தம்பி சுபாஷிடம் விசாரணை நடத்தி விட்டு திரும்பிச் சென்றனர்.
தொடர்ந்து, விநாயகமூர்த்தி தற்போது சென்னை பெரவள்ளூர் எஸ்.ஆர்.பி. காலனி 14-வது தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருவது தெரியவந்ததை அடுத்து, அங்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனைக்கான காரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. மேலும், இந்த நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ